Wednesday 18 February 2015

10th tamil samacheir kalvi part 2

சிலப்பதிகாரம் சொற்பொருள்: கொற்கை – பாண்டிய நாட்டின் துறைமுகம் தென்னம் பொருப்பு – தென்பகுதியில் உள்ள பொதிகைமலை பலியோடு படரா – மறநெறியில் செல்லாத அடர்த்துஎழு குருதி - வெட்டப்பட்ட இடத்தினின்றும் பீறிட்டு எழும் செந்நீர் பசுந்துணி – பசிய துண்டம் தடக்கை – நீண்ட கைகள் அறுவற்கு இளைய நங்கை – பிடாரி இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாடச் செய்த காளி கானகம் – காடு உகந்த – விரும்பிய தாருகன் – அரக்கன் பேர்உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை செற்றம் – கறுவு செயிர்த்தனள் - சினமுற்றவள் பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள் நீர்வார்கண் - நீரொழுகும் கண்கள் தேரா – ஆராயாத எள்ளறு - இகழ்ச்சி இல்லாத இமையவர் - தேவர் புள் – பறவை புன்கண் – துன்பம் கடைமணி - அரண்மனை வாயில்மணி ஆழி – தேர்ச்சக்கரம் ஏசா -பழியில்லா கோறல் - கொல்லுதல் கொற்றம் - அரச நீதி நற்றிறம் - அறநெறி படரா – செல்லாத வாய்முதல் – உதடு இலக்கணக்குறிப்பு: மடக்கொடி – அன்மொழித்தொகை தேரா மன்னா, ஏகாச் சிறப்பின,; படராப் பஞ்சவ, அடங்காப் பசுந்துணி– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தடக்கை – உரிச்சொற்றொடர் புன்கண், பெரும்பெயர,அரும்பெறல், பெருங்குடி, கடுங்கோல், செங்கோலன், நன்மொழி– பண்புத்தொகை உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் – வினைத்தொகை அவ்வூர் – சேய்மைச்சுட்டு வாழ்தல் – தொழிற்பெயர் என்கால் என்பெயர், நின்னகர், என்பதி – ஆறாம் வேற்றுமைத்தொகை புகுந்து – வினையெச்சம் தாழ்ந்த, தளர்ந்த – பெயரெச்சம் வருக, தருக, கொடுக – வியங்கோள் வினைமுற்று பகுபத உறுப்பிலக்கணம் : வருக - வா (வரு) + க. வா - பகுதி, வா - வரு என்றானது விகாரம், க - வியங்கோள் வினைமுற்று விகுதி; வந்தோய் - வா (வ) + த் (ந்) + த் + ஓய். வா - பகுதி, வா - வ எனக் குறுகியது விகாரம், த் - சந்தி, த் - ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, ஓய் - முன்னிலை ஓருமை வினைமுற்று விகுதி; தீர்த்தோன்- தீர் + த் + த் + ஓன். தீர் - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, ஓன் - ஆண்பால் வினைமுற்று விகுதி; உரைத்தது - உரை + த் + த் + அ + து. உரை - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, அ - சாரியை, து - ஓன்றன்பால்; வினைமுற்று விகுதி; கேட்ட - கேள் (ட்) + ட் + அ. கேள் - பகுதி, ள் - ட் ஆனது விகாரம், ட் - இறந்தகரல இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி; வீழ்ந்தனள் - வீழ் + த் (ந்) + த்+ அன் + அள். வீழ் - பகுதி, த் - சந்தி, த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, அன்- சாரியை, அள் - பெண்பால் வினைமுற்று விகுதி. பிரித்தறிதல்: எள்ளறு = எள் + அறு புள்ளுறு = புள் + உறு அரும்பெறல் = அருமை + பெறல் பெரும்பெயர் = பெருமை + பெயர் அவ்வூர் = அ + ஊர் பெருங்குடி = பெருமை + குடி புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு பெண்ணணங்கு = பெண் + அணங்கு நற்றிறம் = நன்மை + திறம் காற்சிலம்பு = கால் + சிலம்பு செங்கோல் = செம்மை + கோல் ஆசிரியர் குறிப்பு; இளங்கோவடிகள் சேரமரபினர். பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை. தமையன் = சேரன் செங்குட்டுவன் இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார். சமய வேறுபாடற்ற துறவி. பாரதியார் இவரை, “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றார். நூல் குறிப்பு: சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று. இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. புகார்க்காண்டம் = 10 காதை மதுரைக்காண்டம் = 13 காதை வஞ்சிக்காண்டம் = 7 காதை இக்காப்பியம் “உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள்” என அழைக்கப்படுகிறது. முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைக் போற்றிப் புகழ்வார். “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார். வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை. “இசை நாடகமே” சிலப்பதிகாரக் கதையின் உருவம். நூலெழுந்த வரலாறு: சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான். அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் ‘அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார். அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” என்று கூறினார். சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுக” என்றார். நூற்கூறும் உண்மை: அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் தமிழ் வளர்ச்சி உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும் தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். -பாவேந்தர் பாரதிதாசன் சொற்பொருள்: தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும் சுவடி – நூல் எளிமை – வறுமை நாணிடவும் – வெட்கப்படவும் தகத்தகாய – ஒளிமிகுந்த சாய்க்காமை – அழிக்காமை நூற்கழகங்கள் - நூலகங்கள் களைந்தோம் - நீக்கினோம் தாபிப்போம் – நிலைநிறுத்துவோம் இலக்கணக்குறிப்பு; புதிது புதிது, சொல்லிச் சொல்லி – அடுக்குத்தொடர் செந்தமிழ் – பண்புத்தொகை சலசல – இரட்டைக்கிளவி பகுபத உறுப்பிலக்கணம்:: கழித்தோம் - கழி + த் + த் + ஓம். கழி - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, ஓம் - தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி. களைந்தோம் - களை + த்(ந்) + த் + ஓம். களை - பகுதி, த் -சந்தி, த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, ஓம் - தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி. பிரித்தறிதல்: வெளியுலகில் = வெளி + உலகில் செந்தமிழ் = செம்மை + தமிழ் ஊரறியும் = ஊர் + அறியும் எவ்விடம் = எ = இடம் ஆசிரியர் குறிப்பு; பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நால் புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கபடுவார். குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகள். பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் பாவேந்தரின் புகழ்மொழி: தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் எனப் பாவேந்தர் பெரியாரை புகழ்கிறார். பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்: பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை. ஒன்று, அடிப்படைத் தேவைகள் = பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை = குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு பெண்கல்வி: பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றார். “அங்கள் பங்களைப் படிக்கச் வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவு அட்டர சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். பெண்ணுரிமை: “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று சிந்தித்தவர் பெரியார். பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்க வேண்டும்” என்று வலியுறித்தினார். சொத்துரிமை: பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு காரணம் என்று உணர்ந்தார். அதற்காகக் அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார். அரசுப்பணி: அரசாங்கத்தின் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் பொது நம் சமுதாயத்தில் புரட்ச்சி ஏற்படும் என்றார். குழந்தைதிருமணம்: குழந்தை திருமணம் பற்றி “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார். மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்: சமுதாயத்தில் முறையான அன்பும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால் தான், இம்மாதிரியான தீமைகள் ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாற வேண்டும். தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்றார். கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றார். ஒழுக்கம்: ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகும் என்றார். பெரியார், பெண்களே சமூகத்தின் கண்கள் என்று கருதியவர். இலக்கணம்: சொல்: ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்த்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள்தரும் பல சொற்கள். பதம் - பகுபதம் ( பகுக்கவியலும் பதம் ); பகாப்பதம் ( பகுக்கவியலாபதம் மொழி - தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி கிளவி - இரடடைக்கிளவி (இரட்டைச்சொல் (எ-டு) பூ ,கை, தா, வா - இவை ஓரெழுத்துச் சொற்கள். மண், மாந்தர், நடந்தனர் - இவை இரண்டு முதலாகப் பல எழுந்துகள் தொடர்ந்த சொற்கள். மூவகை மொழிகள் மொழி தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும். 1. தனிமொழி ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி. (எ-டு) வா, கண், செய்தான். 2. தொடர்மொழி இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி (எ-டு) 1. படம் பார்த்தாள். 2. பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருக்கின்றன. 3. பொதுமொழி ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதேசொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்துநின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது,.. பொதுமொழி. . (எ-டு) அந்தமான் அந்தமான் என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த + மான் எனப் பிரிந்து நின்று, அந்த மான் (விலங்கு) என வேறுபொருளையும் தருகின்றது. இதேபோல், பலகை, வைகை, தாமரை, வேங்கை முதலியன தனிமொழியாகவும் பொதுமொழியாகவும் வருவதை அறிக. ஒருமொழி ஒருபொருள னவாம் தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன. - நன்னூல், 260 வினைச்சொல்: இராமன் வந்தான். கண்ணன் நடந்தான். இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள். அவையே எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள். இவையே பயனிலைகளாகவும் ( முடிக்கும் சொற்களாகவும் ) உள்ளன. இவ்வாறு, எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள். வினைமுற்று: அருளரசு வந்தான். வளவன் நடந்தான். இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன. இவ்வாறு, தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர். இது முற்றுவினை எனவும் வழங்கப்படும். “வந்தான், நடந்தாண்' என்னும் வினைமுற்றுகள் “ஆன்” என்னும் விகுதி பெற்றுள்ளதால், உயர்திணையையும், ஆண்பாலையும், ஒருமை என்ற எண்ணையும், படர்க்கை இடத்தையும், உணர்த்துகின்றன, என்ற இடைநிலை வந்துள்ளதால் (நட + த் ( ந் ) + த் + ஆன்); (வா (வ) + த் (ந்) + த் + ஆன்) இஃ;து இறந்த காலத்தையும் உணர்த்துகிறது வினனமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்; முக்காலங்களில் ஒன்றை உணர்த்தும்; திணை, பால், எண், இடங்களைக் காட்டும் இவ்வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும். தெரிநிலை வினைமுற்று செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று. (எ-டு) உழுதான் செய்பவன் - உழவன் கருவி - கலப்பை நிலம் - வயல் செயல் - உழுதல் காலம் - இறந்தகாலம் செய்பொருள் -நெல் செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே. - நன்னூல், 320 குறிப்பு வினனமுற்று: பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக்கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினை-முற்று எனப்படும். அவன் பொன்னன் - பொன்னை உடையவள் - பொருள் அவன் விழுப்புரத்தான் - விழுப்புரத்தில் வாழ்பவன் - இடம் அவன் சித்திரையான் - சித்திரையில் பிறந்தவன் - காலம் அவன் கண்ணன் - கண்களை உடையவன் - சினை அவன் நல்லன் - நல்ல இயல்புகளை உடையவன் - குணம் அவன் உழவன் - உழுதலைச் செய்பவன் - தொழில் பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே.- நன்னூல், 321 அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த “பொன்னன்”, என்பதே குறிப்பு வினை ஆகும். பொன்னை உடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது. எச்சம் கயல்விழி படித்தாள். கோதை சென்றாள். இத்தொடர்களில் படித்தாள், சென்றாள் என்பன வினைமுற்றுகள். இவ்வினைமுற்றுகள் சில இடங்களில் ஆள், என்னும் விகுதி குறைந்து படித்த, சென்ற எனவும், படித்து, சென்று எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்; ஆதலால், எச்சம் எனப்படும்; அல்லது வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும். பெயரெச்சம் படித்த கயல்விழி. சென்ற கோதை, படித்த, சென்ற என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி, கோதை எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும். அதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும். இப்பெயரெச்சம் காலவகையால் மூவகைப்படும். இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த கயல்விழி, சென்ற கோதை நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் கயல்விழி, செல்லும் கோதை இது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும். தெரிநிலைப் பெயரெச்சம் வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான். இத்தொடரில் வந்த என்பது பையன் என்னும் பெயரைக்கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும். செய்த, செய்கின்ற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரெச்ச வாய்பாடுகள். இவை முக்காலத்தையும் செயலையும் வெளிப்;படையாகக் காட்டிச் செய்பவன் முதலான ஆறாம் எஞ்சி நிற்கும். இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும். (எ-டு) உண்ட இளங்கோவன். செய்பவன் - இளங்கோவன் கருவி - கலம் நிலம் - வீடு செயல் - உண்ணுதல் காலம் - இறந்த காலம் செய்பொருள் - சோறு உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறே பொருத்திக் காணலாம். உடன்பாடு - எதிர்மறை (எ-டு) உண்ட இளங்கோவன் - உண்ணாத இளங்கோவன் குறிப்புப் பெயரெச்சம் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும். (எ-டு) நல்ல பையன் இத்தொடரில் நல்ல என்னும் சொல் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிந்துள்ளது. இது காலத்தைக் (இன்று நல்ல பையன், நேற்று நல்ல பையன், நாளை நல்ல பையன்) குறிப்பால் உணர்த்தும். உடன்பாடு - எதிர்மறை (எ-டு) நல்ல மாணவன் - தீய மாணவன் வினையெச்சம் முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். (எ-டு)படித்து வந்தான், பாடக் கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப் பார்த்தான். அதாவது, ஓர் எச்சவினை, வினையக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். இவ்வினையெச்சம் காலவகையால் மூவகைப்படும். இறந்தகால வினையெச்சம் - படித்து வந்தான், ஓடிச் சென்றான். நிகழ்கால வினையெச்சம் - படித்து வருகின்றான் ஓடிச்செல்கின்றான் எதிர்கால வினையெச்சம் - படித்து வருவான், ஓடிச் செல்வான். இவ்வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா. வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா. மேலே காட்டியதுபோல அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும். தெரிநிலை வினையெச்சம் படித்துத் தேறினான். படிக்கச் செல்கின்றான் இத்தொடர்களில் படித்து, படிக்க என்னும் சொற்கள் எச்ச வினையாய் நின்று காலத்தைக் காட்டித் தேறினான், செல்கினறான்; ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும். குறிப்பு வினையெச்சம் மெல்லப் பேசினான். கண்ணன் நோயின்றி வாழ்ந்தான். இவ்விரு தொடர்களிலும் உள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும். முற்றெச்சம் மைதிலி வந்தனள் பாடினள். முருகன் படித்தனன் தேறினன். இத்தொடர்களில், வந்தனள், படித்தனன் என்னும் வினைமுற்றுகள் வந்து, படித்து என்னும் வினையெச்சப் பொருள்களில் நின்று, வேறு வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொணடு முடிவதே முற்றெச்சம் எனப்படும். மொழித்திறன் பயிற்சி தொகைச்சொல் கனிகளுள் எவற்றை முக்கனி எனக் குறிப்பிடுகிறோம்? மா, பலா, வாழை. முக்கனி என்பது தொகைச்சொல் எனப்படும். தொகை என்னும் சொல்லுக்குத் தொகுத்தல் என்பது பொருள். சில தொகைச்சொற்களை விரித்துக் காண்போம். இருவினை - நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை இருதிணை - உயர்திணெ, அஃறினை; அகத்திணை, புறத்திணை. முத்தமிழ் - இயல், இசை, நாடகம் முப்பால் - அறம், பொருள், இன்பம். மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை. மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர். நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால். ஐம்புலன் - தொடுஉணர்வு, உண்ணல், உயிர்த்தல், காணல், கேட்டல். ஐம்பொறி - மெய், வாய், மூக்கு, கண், செவி.

Monday 16 February 2015

Mahe

Life

10th tamil samacher kalvi

கடவுள் வாழ்த்து

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே.
-மாணிக்கவாசகர்
சொற்பொருள்:
மெய் –உடல்
விதிர்விதிர்த்து – உடல் சிலிர்த்து
விரை – மணம்
நெகிழ – தளர
ததும்பி – பெருகி
கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
சயசய – வெல்க வெல்க
இலக்கணக்குறிப்பு:
விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
ஆசிரியர் குறிப்பு:
சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்.
திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணிப் புரிந்தார்.
திருப்பெருந்துறை இறைவனால் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
இவரை “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.
திருவாசகமும் திருகோவையாரும் இவர் அருளியவை.
இவர் எழுப்பிய கோவில், தற்போது “ஆவுடையார் கோவில்” என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.
இவர்தம் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.
திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
திருவாசகத்தை சிறப்பிக்க, “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் தொடர் வழங்கலாயிற்று.
திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
ஜி.யு.போப்:
“உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்கிறார் ஜி.யு.போப்.
திருக்குறள்
சொற்பொருள்:
விழுப்பம் – சிறப்பு
ஓம்பப்படும் – காத்தல் வேண்டும்
பரிந்து – விரும்பி
தேரினும் – ஆராய்ந்து பார்த்தாலும்
குடிமை – உயர்குடி
இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
அழுக்காறு – பொறாமை
ஆக்கம் – செல்வம்
ஒல்கார் - விலகமாட்டார்
உரவோர் - மனவலிமையுடையோர்
ஏதம் – குற்றம்
எய்துவர் – அடைவர்
இடும்பை – துன்பம்
வித்து – விதை
ஒல்லாவே – இயலாவே
உலகம் - உயர்ந்தோர்
ஓட்ட – பொருந்த
ஒழுகல் – நடத்தல், வாழ்தல்

காலமறிதல்
கூகை – கோட்டான்
இகல் – பகை
திரு – செல்வம்
தீராமை – நீங்காமை
அருவினை - செய்தற்கரிய செயல்
ஞாலம் - உலகம்
பொருதகர் – ஆட்டுக்கடா
ஒடுக்கம் - அடங்கியிருப்பது
சேருவர் – பகைவர்
பேருந்தகைத்து - பின் வாங்கும் தன்மையது.
பொள்ளென - உடனே
புறம்வேரார் - வெளிப்படுத்தமாட்டார்
உள்வேர்ப்பர் - மனத்தினுள் மறைத்து வைத்திருப்பர்
ஒள்ளியவர் - அறிவுடையார்
செறுநர் - பகைவர்
சுமக்க – பனிக
இறுவரை - முடிவுக்காலம்
கிழக்காந்தலை – தலைகீழ்(மாற்றம்)
எய்தற்கு – கிடைத்தற்கு
இயைந்தகாலம் - கிடைத்தபொழுது
கூம்பும் – வாய்ப்பற்ற
சீர்த்த இடம் - உரிய காலம்
இலக்கணக்குறிப்பு:
ஒழுக்கம் – தொழிற்பெயர்
காக்க – வியங்கோள் வினைமுற்று
பரிந்து, தெரிந்து – வினையெச்சம்
இழிந்த பிறப்பு – பெயரெச்சம்
கெடும் - செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர்
உடையான் – வினையாலணையும் பெயர்
உரவோர் – வினையாலணையும் பெயர்
எய்தாப் பழி – ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
எய்துவர் - பலர்பால் வினைமுற்று
நல்லொழுக்கம்,தீயொழுக்கம் – பண்புத்தொகை
சொலல் – தொழிற்பெயர்
அருவினை – பண்புத்தொகை
அறிந்து – வினையெச்சம்
கலங்காது - எதிர்மறை வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம் :
எய்துவர் - எய்து + வ் + அர். எய்து - பகுதி, வ் - எதிர்கால இடைநிலை,அர் - பலர்பால் வினைமுற்று விகுதி.
அறிந்து - அறி + த் ( ந் ) + த் + உ. அறி - பகுதி, த் - சந்தி, த் - ஆனது விகாரம், - இறந்தகால இடைநிலை, உ - வினையெச்ச விகுதி.

அணி :
1. அழுக்கா றுனடயான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொருள் : பொறாமை உனடயவனிடம் செல்வம் நிலைக்காது; அதுபோல, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.
அணி : உவமையணி.

2. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

பொருள் : ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து அடங்கியிருப்பதானது, ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையைப் போன்றது.
அணி : உவமையணி.

3. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள் : வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாகக் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.
அணி : உவமையணி.

பிரித்தறிதல்:
பரிந்தோம்பி - பரிந்து + ஓம்பி
தெரிந்தோம்பி - தெரிந்து + ஓம்பி
ஆசிரியர் குறிப்பு:
திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொது நெறி காட்டியவர்.
இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்பர்.
தமிழக அரசு தைத் திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடுகிறது.
நூல் குறிப்பு:
திரு + குறள் = திருக்குறள்
உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்றும், “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” என்றும் பாவேந்தர் போற்றுகின்றார்.
மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
ஏலாதி
சொற்பொருள்:
வணங்கி – பணிந்து
மாண்டார் – மாண்புடைய சான்றோர்
நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்
நோக்கி – ஆராய்ந்து
இலக்கணக்குறிப்பு:
நூல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
பலியில்லா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம் :
நோக்கி - நோக்கு + இ. நோக்கு - பகுதி, இ - வினையெச்ச விகுதி;
வாழ்வான் - வாழ் + வ் + ஆன். வாழ்- பகுதி, வ் - எதிர்கால இடைநிலை, ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி;
நுனித்து - நுனி + த் + த் + உ. நுனி - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, உ - வினையெச்ச விகுதி.
பிரித்தறிதல்:
வழியொழுகி = வழி + ஒழுகி
ஆசிரியர் குறிப்பு:
ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு.
இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
நூல் குறிப்பு:
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி எனப் பெயர்.
இந்நூலின் நற்கருத்துகள், கற்போரின் அறியாமையை அகற்றும்.

அறிந்துகொள்வோம்

எட்டுத்தொகை நூல்கள்:
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஜங்குறுநூ(று).
ஓத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு, அகம், புறம்என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை.

பத்துப்பாட்டு நூல்கள்:
முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,
பெருகு வளமதுரைக் காஞ்சி, - மருவினிய
கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும் பத்து.

உயர்தனிச் செம்மொழி
பாவலரேறு பெருஞ்சித்திரனார்:
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.

செம்மொழியின் இலக்கணம்:
“திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
பாவணார் கூற்று:
“தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.
முஸ்தபாவின் செம்மொழி தகுதிப்பாடுகள்:
தொன்மை, பிறமொழித் தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை, இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப் 11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.
தொன்மை:
முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்பர்.
உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருத்து “என்றுமுள தென்தமிழ்” என்பார் கம்பர்.
பிறமொழித் தாக்கமின்மை:
பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது.
ஆனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.
தாய்மை:
தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது.
தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல்.
1090 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 180 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.
தனித்தன்மை:
இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் கொண்டது தமிழ்.
தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:
உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
இவற்றின் மொத்த அடிகள் = 26350.
அக்காலத்தே இவ்வளவிற்கு “விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லை” என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த “கமில்சுவலபில்” என்னும் செக் நாடு மொழியியல் அறிஞரின் முடிபு.
மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.
சங்க இலக்கியங்கள் “மக்கள் இலக்கியங்கள்” எனப்படும்.
“தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பதை உண்டாக்குவது” என்பார் கெல்லட்.
நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
தொல்காபிய்யம் எழுத்து,சொல்,பொருள் என மூன்று இலக்கணங்களை கூறுகின்றது. அவரின் ஆசிரியர் அகத்தியர்எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி என ஐந்து இலக்கணங்களையும் கூறியுள்ளார்.
பொதுமைப் பண்பு:
தமிழர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்கள்.
செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டவர்கள்.
நடுவுநிலைமை:
சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை.
இயற்கையோடு இயைந்தவை.
மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை.
பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு:
சங்கப் படைப்புகள், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை” முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்திகிறது.
உயர் சிந்தனை:
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என உலக மக்களை ஒன்றினைந்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.
கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:
தமிழ்ச்சான்றோர் மொழியை, “இயல், இசை, நாடகம்” எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.
எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.
குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்னும் அறநெறியை உலகாள்வோர்க்கு உணர்த்துகிறது.
மொழிக் கோட்பாடு:
“இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்பார் முனைவர் எமினோ.
ஒருமொழிக்கு 33 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது.
செம்மொழி:
இவ்வருஞ்சிறப்புமிக்க தமிழைச் “செம்மொழி” என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது.
நடுவண் அரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

அறிந்து கொள்வோம்

செம்மொழிக் காலக்கோடு
1901 - மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
1918 - மேலைச்சிவபுரிச் சன்மர்ச்க்க சபை, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டித் தீர்மானம் நிறைவேற்றி, அதை இந்திய அரசுக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது.
1918 - சைவ சித்தாந்த, மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1919 - கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது.
1966 - உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.
2004 - நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

பரிதிமாற் கலைஞர்
பிறப்பு:
சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்.
தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.
கல்வி:
தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.
மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.
இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.
இயற்றமிழ் மாணவர்:
தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை “இயற்றமிழ் மாணவர்” எனப் பெயரிட்டு அழைத்தார்.
மதுரைச் தமிழ்ச்சங்கம்:
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
திராவிட சாஸ்திரி:
யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, “திராவிட சாஸ்திரி” என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.
தனிப்பாசுரத்தொகை:
பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
இந்நூலினை, ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
கம்பராமாயண உவமை:
பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்த பொது நடந்த நிகழ்வு.
கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய “ஆர்தரின் இறுதி” என்னும் நூலில் இருந்து ஒரு பாடலை சொல்லி அதில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
"தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா?" என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள “விடுநனி கடிது” என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.
தமிழின் சிறப்பை உணர்த்தல்:
வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து.
தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.
தமிழ்த்தொண்டு:
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவுசெய்யப்பட்டது.
ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது.
படைப்புகள்:
“ரூபாவாதி, கலாவதி” முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.
அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
“சித்திரக்கவி” என்னும் நூலைப் படைத்தார்.
குமரகுருபரரின் “நீதிநெறிவிளக்கம்” நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
இதழ்ப் பணி:
மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த :”ஞானபோதினி” என்னும் இதழைப் பரிதிமாற் கலைஞர் நடத்தினார்.
மும்மொழிப் புலமை உடையவர்.
மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் “செந்தமிழ்” இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தார்.
தமிழ்மொழி “உயர்தனிச் செம்மொழி” என முதன்முதலாக நிலைநாட்டினார்.
மறைவு:
தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் இயற்கை எய்தினார்.
நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

இலக்கணம்
எழுத்து: சார்பெழுத்துகள்

ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கம்

1. ஐகாரக்குறுக்கம்
‘ஐ’ என்றும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்துப் பாருங்கள். அது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஓலிக்கும். ஆனால், இவ்வெழுத்தைச் (ஐ) சொல்லின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வருமாறு எழுதி ஓலித்துப் பாருங்கள்.
ஐம்பது - சொல்லுக்கு முதலில் வந்து ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது
தலைவன் - சொல்லுக்கு இடையில் வந்து ஒரு மாத்திரையாகக் குறைந்தது
கடலை - சொல்லுக்கு ஈற்றில்; வந்து ஒரு மாத்திரையாகக் குனறந்தது
இவ்வாறு சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களில் வரும் ஐகாரம் தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகராக்குறுக்கம் எனப்படும்.

2. ஔகாரக்குறுக்கம்
ஔ என்னும் நெடில் எழுத்தும், ஐ என்னும் நெட்டெழுத்தைபபோலவே தனியாக ஒலிக்குமபோது, இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஓலிப்பதில்லை. ஆனால், சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஓளகாரம் ஒன்றரை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும். அதுவே ஓளகாரக்குறுக்கம் எனப்படும்.
(எ-டு)
ஔவை, வௌவால் - ஓன்றரை மாத்தியாகக் குறைந்தது.
சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் ஓளகாரம் வாராது.

3. மகரக்குறுக்கம்
‘ம்’ என்னும் மெய்யெழுத்து தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும். அதரவது, 'ம்' என்னும் மெய்யெழுத்து, செய்யுளில் தனக்குரிய அரை மரத்திரை அளவிலிருந்து, கால் மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
(எ-டு) போலும் - போல்ம் - போன்ம்
மருளும் - மருள்ம் - மருண்ம்
அ) செய்யுளில் இடம்பெறும் போலும், மருளும் ஆகிய மகர ஈற்றுச் சொற்கள், ஈற்றயல் உகரங் கெட்டு, போல்ம், மருள்ம் என்றாகிப் பின் போன்ம், மருண்ம் எனத் திரியும். இவ்வாறு திரியும் னகர, ணகரங்களின் முன்னுள்ள மகரம், தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்.
ஆ) மகர ஈற்றுச்சொல் முன் வகர (வ்) முதல்மொழி வந்து சேரும்போது, நிலைமொழி மகரம் குறைந்து ஒலிக்கும்.
(எ-டு)

வரும் + வண்டி = வரும் வண்டி. ‘ம்’ தன் அரை மரத்திரையிலிருந்து குறைந்து, கால் மாத்திரையாக ஒலிக்கும். (வரும் - இது மகர ஈற்று நிலைமொழி. வண்டி இது “வ்” என்னும் வகர முதல் மொழி.)
இவ்விரண்டு இடங்களிலும் குறைந்து ஓலிக்கும் மகரமே மகரக்குறுக்கம் எனப்படும்.

4. ஆய்தக்குறுக்கம்
ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக்குறுக்கம் (“ஃ” என்னும் எழுத்து குறைந்து ஒலிப்பது.)
நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் வருமொழியிலுள்ள தகரத்தோடு (த்) சேரும்போது ஆயதமாகத திரியும். இவ்வாறு திரிந்த ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். அதுவே ஆய்தக்குறுக்கம் எனப்படும். பிறகு, வருமொழியிலுள்ள தகரம் (த்) நிலைமொழிககேற்ப றகரமாக (ற்) வும், டகரமாகவும் (ட்) மாறிப் புணரும்.
(எ-டு)
கல் + தீது =கஃறீது, முள் + தீது = முஃடீது.

மொழித்திறன் பயிற்சி

சொற்றொடர் வகைகள்

1- செய்தித்தொடர்:

அ) பரிதிமாற் கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாசசேரியில் பிறந்தார்.
ஆ) திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
இவ்விரு தொடர்களும் செய்திகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. இவ்வாறு, ஒரு கருத்தினைச் செய்தியாகத் தெரிவிப்பது செய்திததொடர் எனப்படும்.

2. வினாத்தொடர்:
அ) எழில், என்ன சாப்பிட்டாய்?
அ) அன்பரசி, நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை?
இ) எங்கே செல்கிறாய்?
இவ்வாறு வினாப்பொருளைத் தரும் தொடர், வினாத்தொடர் எனப்படும். என்ன? ஏன்? , எங்கே? எப்படி? முதலிய வினாச்சொற்கள் வினாத்தொடரில் அமையும்.

3. உணர்ச்சித்தொடர்:
நீங்கள் சென்னைக்கு அருகிலுள்ள பு+ண்டி ஏரியைப் பார்த்ததுண்டா ?
அதனைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றியது என்ன?
“அடேயப்பா! எவ்வளவு பெரிய ஏரி!”
கண்ணகியும் கயல்விழியும் பாதையில் நடந்துகொண்டே பேசிச் செல்கின்றனர்.
கயல்விழியின் காலில் முள் ஆழமாகக் குத்திவிட்டது. உடனே, அவள் எவ்வாறு அலறியிருப்பாள்?
“ஐயோ, முள் குத்திவிட்டதே!”
இவ்வாறு நாம் பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால், அவற்றை உணர்ச்சித் தொடர்கள் என்கிறோம்.
மகிழ்ச்சி, வியப்பு, துன்பம் முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுமாறு அமைவது, உணர்ச்சித் தொடர்.
என்னே என்னும் சொல்லை வியப்புக் குறித்தும், அந்தோ என்னும் சொல்லைத் துன்பம் குறித்தும் சொற்றொடர்களில் அமைத்துக் காட்டலாம்.
(எ-டு) என்னே, இமயமலையின் உயரம்!
அந்தோ, நாய் வண்டியில் அடிபட்டுவிட்டதே!

4. கட்டளைத்தொடர்:
நீ பள்ளிக்குப் புறப்படும்போது, உன்னிடம் அம்மா கூறுவது என்ன?
பார்த்துப் போ, கவனமாகப் படி என்றுதானே.
இவ்வாறு, ஒரு செயல் அல்லது சில செயல்களைப் பின்பற்றும்படி ஆணையிட்டுக் கூறுவது, கட்டளைதொடர்.

5. தனிநிலைத்தொடர்:
அழகன் பாடம் எழுதுகிறான்.
மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள்.

இத்தொடர்களில் முதல் தொடரில் அழகன் என்பது எழுவாய். இரண்டாம் தொடாpல் மா, பலா, வாழை என்பன எழுவாய்கள்.
இவ்வாறாக, ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒர் பயனிலையைக் கொண்டுமுடிவது, தனிநிலைத்தொடர்.

6. தொடர்நிலைத்தொடர்:
கார்மேகம் கடுமையாக உழைத்தார்; அதனால், வாழ்வில் உயர்ந்தார்.
நேற்று மழை பெய்தது; அதனால், ஏரி குளங்கள் நிரம்பின.
இவ்வாறு, ஓர் எழுவாய் பல பயனிலைகளைக்கொண்டு முடிவது தொடர்நிலைத்தொடர். தொடர்நிலைத் தொடர்கள் அதனால், ஆகையால், ஏனெனில் முதலிய இணைப்புச்சொற்களைப் பெற்று வரும்.

7. கலவைத்தொடர்:
நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை
முருகன், இரவும் பகலும் அயராது படித்ததால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றான்.

இவ்வாறு, ஒரு தனிச்சொற்றொடர் ஓன்று அல்லது அதற்குமேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது, கலவைத்தொடர்.

8, செய்வினைத்தொடர்:
“குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்”. இத்தொடரில்,

குடியரசுத் தலைவர்- எழுவாய்
உலகத் தமிழ் மாநாடு- செயப்படுபொருள்
தொடங்கிவைத்தார் - பயனிலை
இவ்வாறாக எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் செய்வினைத் தொடர் எனப்படும். செயப்படுnpபாருளோடு இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) வெளிப்பட்டு வரும். சில தொடர்களில் மறைந்தும்வரும்.
(எ-டு) மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்
.

9. செயப்பாட்டு வினைத்தொடர்: (செயப்படுபொருள் வினைச்சொல்லைககொண்டு முடிவது)
உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.
இத்தொடரில் சொற்கள் செயப்படுபொருள். எழுவரய், பயனிலை என்னும் வரிசையில் அமைந்துள்ளன. எழுவாயோடு “ஆல்” என்னும் முன்றாம் வேற்றுமை உருபும் உள்ளது. இவ்வகைத் தொடர்களில் பயனிலையோடு படு, பட்டது, பெறு, பெற்றது என்னும் துணைவினைகளுள் ஒன்று சேர்ந்து வரும்.

10, தன்வினைத்தொடர் (எழுவாய், தானே செய்யும் தொழிலை உணர்த்துவது)
பாத்திமா திருக்குறள் கற்றாள்.
இத்தொடரிலுள்ள பாத்திமா என்னும் எழுவாய், ஒரு செயலைத் தானே செய்வதனால், இது தன்வினைத்தொடராகும்.

11. பிறவினைத்தொடர் (எழுவாய், ஒரு செயலைப் பிறரைக்கொண்டு செய்விப்பது)
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்.
இது பிறவிதை;தொடர். பாத்திமா என்னும் எழுவாய், அச்செயலைப் பிறரைக கொண்டு செய்விப்பதனால், இது பிறவினைத்தொடராகும்.

12. நேர்கூற்றுத்தொடர் (ஒருவர் பேசுவதை, அவர் பேசியபடியே கூறுவது)
ஆசிரியர், “மாணவர்களே, நாளை ஓழுக்கமுடைமையில் குறள்கள் ஐந்தனைப் படித்து வருக”, என்றார். இவ்வாறு ஆசிரியர், மாணவர்களிடம் கூறிய இத்தொடர் நேர்கூற்றுத் தொடராகும்.
இதில் மேற்கோள் குறிகள் இடம்பெறும்; தன்னம, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்; இங்கு, இப்போது, இவை எனச் கூட்டுப்பெயர்கள் வரும். நேற்று, இன்று, நாளை எனக் காலப்பெயர்களும் வரும்.
(எ-டு)
தேன்மொழி பொன்னியிடம், “நான், நாளை மதுரைக்குச் செல்வேன்” என்றாள்.

13. அயற்கூற்றுத்தொடர்:
ஒருவர் அல்லது பலரின் உரையாடல்களை அயலார் கூறுவதுபோல் அமைப்பது அயற்கூற்றுத்தொடர்.
பொன்னியிடம் தேன்மொழி, தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்.
அயற்கூற்றில் மேற்கோள் குறிகள் வாரா; இக்கூற்றில் தன்மை, முன்னிலைப்
பெயர்கள், படர்க்கைப் பெயர்களாக மாறும்; சுட்டுப்பெயர்கள் அது, அவை, அங்கே என மாறும்;
காலப்பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்; என்று, ஆக என்னும் இலைப்புச்சொற்களும் இடம்பெறும்.

14. உடன்பாட்டுத்தொடர்:
செயல் அல்லது தொழில் நிகழ்வதை நேர்மறையாக உணத்துவது, உடன்பாட்டுத்தொடர்
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள்.

15. எதிர்மறைத்தொடர்:
கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்.
இத்தொடரில், கலைச்செல்வி கட்டுரை எழுதவில்லை எனச் செயல் நிகழாமையைக் கூறுவதனால், இது எதிர்மறைத்தொடர்.

16. பொருள்மாறா எதிர்மறைத்தொடர்:
கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்.
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் என்னும் தொடர் உடன்பாட்டுததொடர்.
கலைச்செல்வி கட்டுரை எழுதவில்லை என்பது இதற்கான எதிர்மறைத்தொடர்.
மேலே உள்ள உடன்பாட்டுத்தொடர் பொருள்மாறா எதிர்மறைததொடராக மாற்ற வேண்டுமானால், அதனை இரண்டு எதிர்மறைகளைக்கொண்ட தொடராகக், கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள் என மாற்றுதல்வேண்டும். இதற்குக் கலைசசெல்வி கட்டுரை எழுதினாள் என்பதே பொருள் என்பதனால், இது பொருள்மாறா எதிர்மறைத்தொடர் எனப்படுகிறது.
இரண்டு எதிர்மறைச்சொற்கள் சேர்ந்து வந்தால், அது உடன்பாட்டுப் பொருளைத் தரும்.

தமிழ் எண்ணுருக்கள்

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000
௰௱௱௲ = 100,000,000
௱௱௱௲ = 1,000,000,000
௲௱௱௲ = 10,000,000,000
௰௲௱௱௲ = 100,000,000,000
௱௲௱௱௲ = 1,000,000,000,000
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000
ஏறுமுக இலக்கங்கள்:
1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1,000= ஆயிரம்
1,00,000 = லட்சம்
1,00,00,000 = கோடி
10,00,00,000 = அற்புதம்
1,00,00,00,000 = நிகற்புதம்
10,00,00,00,000 = கும்பம்
1,00,00,00,00,000 = கணம்
10,00,00,00,00,000 = நிகற்பம்
1,00,00,00,00,00,000 = பதுமம்
10,00,00,00,00,00,000 = சங்கம்
1,00,00,00,00,00,00,000 = வெள்ளம்
10,00,00,00,00,00,00,000 = அந்நியம்
1,00,00,00,00,00,00,00,000 = அற்ட்டம்
10,00,00,00,00,00,00,00,000 = பற்றட்டம்
1,00,00,00,00,00,00,00,00,000 = பூறியம்
10,00,00,00,00,00,00,00,00,000 = முக்கோடி
1,00,00,00,00,00,00,00,00,00,000 = மகாயுகம்
இறங்குமுக இலக்கங்கள்:
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்